பிள்ளைகள் பெறுவதில் சிக்கலா ; என்னிடம் அறிவிக்கவும் ! மேர்வின்
வத்தளை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்ப ங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான கூரைத் தகடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய அமைச்சர், சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறி வருகிறது என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் முடிந்தளவு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறும், அதில் பிரச்சினைகள் இருந்தால் தனக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். சட்டை பைக்குள் போட்டு கொள்ளும்படி பணத்தை சம்பாதிக்க முடியாது போகும் போது சிலர் எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.
ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரம் முயற்சித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பிரதேச சபை முதல் அனைவரும் அதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும். எவர் எதனை கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது ஒரு குடும்பம் போன்றது. அதில் தாய் மற்றும் தந்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
இந்த குடும்பத்தை பிரிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதியின் குடும்பத்தினர் மற்றும் பொலியத்தையில் இருந்து வந்த என்னை தவிர ராஜபக்ஷ குடும்பத்தினர் பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment