Thursday, June 12, 2014

பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவியர் சங்க பரிசளிப்பு விழா நாளை!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் 2005ஆம் ஆண்டு மாணவியர் பிரிவின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை (13.06.2014) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சம் ரிபாய் ஹாஜியார் கேட்போர் கூடத்தில் அதிபர் திருமதி எச். என். யூசுப் தலைமையில் நடைபெறும்.

மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன பிரதம அதிதியாகவும் வலய கல்விப் பணிப்பாளர் வை.எம்.ஜயந்த விக்ரமநாயக்க, பிரதி மாகாண கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம். இன்சார், மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அலவி, பிராந்திய கல்விப் பணிப்பாளர் கமகே ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குகமூர்த்தி, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியும் கல்வி அபிவிருத்திப் பேரவையின் தலைவருமான கலாநிதி எஸ். எல். மன்சூர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்வார்கள்.

இப்பரிசளிப்பு வைபவத்தில் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரை சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்களும், கேடயங்களும், பதக்கங்களும், பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com