Saturday, June 28, 2014

பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவற்கு ஒத்துழைக்குமாறு ரணிலின் காலில் விழுகிறது ஜேவிபி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை போட்டியிடச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் பிரயத்தனம் எடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஜேவிபியின் மேல் மாகாண சபைத் தலைவர் லால் காந்த இது தொடர்பில் கருத்துரைக்கும்போது,

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள தீர்மானமானத்தை மாற்றுவதற்கு தங்களது கட்சி பெரும் உற்சாகம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிமிடம் வரை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கே முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராகப் போட்டியிடவுள்ள மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடும்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒனறிணையாதிருப்பின் தானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com