இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான், தீவிரவாதப் பயிற்சி அளித்து வருகின்றது - சுப்பிரமணியம்!
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான், தீவிரவாதப் பயிற்சி அளித்து வருகின்றது என சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது,
இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தீவிரவாதத்தை விரட்டியடிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியம். இது தொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டும், பேச வேண்டும்.
பாகிஸ்தானியர்களால் பயிற்சி அளிக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள், இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் ஊடுறுவி வருகிறார்கள். இது அபாயகரமானது.
பாரதீய ஜனதா கட்சி, தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு தவறை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள்தான் என்று கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
0 comments :
Post a Comment