ரமழான் நோன்புக்காக சவூதியிலிருந்து அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்கள் எங்கே? - அசாத் சாலி
முஸ்லிம்களுக்காக ரமழான் நோன்பை முன்னிட்டு சவூதி அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 200 தொன் பேரீச்சம் பழங்கள் பிரதி அமைச்சர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்துகிறார்.
கூட்டுறவு உள்நாட்டு வியாபார அமைச்சர் ஜோன்ஸ்டர் பிரனாந்துவுக்கு கடிதம் ஒன்றில் இதுபற்றி அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
அவ்வாறு அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள பேரீச்சம் பழங்களை புறக்கோட்டை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்கு போட்டி நிலவுவதாகவும் அசாத் சாலி குறிப்பிடுகின்றார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது -
அந்தப் பேரீச்சம்பழ பைக்கற்றுக்களில் விற்பனை செய்வதற்குத் தடை எனவும், இலவச விநியோகத்திற்கு எனவும் அச்சிடப்பட்டுள்ள போதும் இவ்வாறு விற்பனை செய்வது விசனிக்கத் தக்க விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment