Monday, June 2, 2014

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மலேசியாவில் மரணம்! மரணம் தொடர்பில் மர்மம்!!

மலேசியாவில் வாகன விபத்தில் மரணித்ததாக கூறப்படும் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மலேசியாவில் மரணமான இவரை அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்ற ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப் படுகின்றது. கடந்த 24ம் திகதி மலேசியா விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் விபத்துக்கு ள்ளாகியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன் என்பவரே வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் சுமார் 4 வருட காலமாக மலேசியாவில் தொழில் புரிந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று அவருடைய உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில்,

தனது கணவன் கடந்த ஒரு வருடத்துக்கு முதல் தான் அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் இலங்கை பணம் 8 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதற்க்கு பணம் தேவை, பணத்தை தனது கணக்குக்கு போடும்படி மனைவியிடம் கூறியுள்ளார். அதன் படி மனைவியும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தரகர்கள் அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி இவரை ஏமாற்றி உள்ளனர்.

இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தனக்கு கணவன் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார் என தெரிவித்தார். இவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்படுள்ளது என தெரிவித்தார். ஆகவே இது தொடர்பான அதிகாரிகள் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வை பெற்றுத் தரும்படி கோருகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com