தலிபான்களை இலங்கையில் உருவாக்க அமெரிக்க முயற்சி - சம்பிக்க
தலிபான்களை இலங்கையில் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஊக்குவித்து வருகின்றது எனவும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் செய்த அதே தவறையே அளுத்கமை விடயத்திலும் செய்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலிபான்களை இலங்கையில் உருவாக்க அது முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் தலிபான்களை அமெரிக்கா முன்னர் ஊக்குவித்தது பின்னர் அது அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமைந்தது எனவும் ஆனால் அதேபோன்றதொரு செயற்பாட்டையே தற்போதுள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் மிக்செய்ல் சிசன் இலங்கையில் செய்துவருகின்றார் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment