பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீன சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு!
நிட்டம்புவ பஸ்யால பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சுயாதீன சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசார ணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
மீரிகம கித்துல்வல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே பொலிஸார் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்திருந்தார். நீதிமன்றத்தில் வெளியாகும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment