Monday, June 30, 2014

கோத்தாவின் தீர்மானம் கண்டு மகிழ்வடைகிறது முஸ்லிம் கவுன்ஸில்!

இன, மதவாத பிரச்சினைகளை கிளப்பிவரும் இணைத்தளங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ள அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் இந்தத் தீர்மானம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில், இந்தத் தீர்மானது மிகவும் தேவைப்பாடானது என்றும் இத்தீர்மானத்தை எடுத்த்து தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேசத்திற்கே இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனச் குறிப்பிட்டுள்ள முஸ்லிம் கவுன்ஸில், இதற்கு முன்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

எதுஎவ்வாறாயினும், சமூக இணையத்தளங்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் இந்தத் தீர்மானத்தைச் செயற்படுத்துமாறும் முஸ்லிம் கவுன்ஸில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கேட்டுக் கொண்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment