பாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய்ப் பேரன் !!!
மது போதையில் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை மொனராகலை பகுதியின் தம்பகல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தம்பகல்லை கங்கொடகம பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவி த்தனர். குறித்த வயோதிபப் பெண் தனிமையில் இருந்த வேளையில் வீட்டிற்குள் நுழைந்த இராணுவ சிப்பாயான பேரன் அவர் மீது பாலியல் வல்லுறவினை மேற் கொண்டுள்ளான். அதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி கூக்குரலிடவே பேரன் தப்பியோடியுள்ளான்.
கூக்குரல் சத்தத்தைக் கேட்டு அங்கு கூடியவர்கள் தப்பியோடிய நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர் விடுமுறையில் வீடு வந்தவரென்றும் தனது தாயின் தாயையே மதுவெறியில் பாலியல் வல்லுறவு க்குட்படுத்தியுள்ளாரென்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட வயோதிபப்பெண் 83 வயதுடையவர் என்பதும் அவரது பேரனான இராணுவ சிப்பாய் 30 வயதுடையவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
1 comments :
இலங்கையில் எல்லோரும் காஞ்சு போய் தான் உள்ளான்கள் போல இருக்கு.
Post a Comment