தர்காநகர் பிரச்சினையில் புத்தபிக்கு ஒருவர் இறந்தார்…? - பொலிஸ் மா அதிபர் தெளிவுறுத்துகிறார்
பொய் வதந்திகளை நம்பி ஏமாறாதீர்கள்!
நேற்று பிற்பகல் அளுத்கம தர்காநகரில் ஏற்பட்ட கலவரத்தின்போது, பௌத்த துறவி ஒருவர் காலஞ்சென்றுள்ளதாகக் கூறப்படும் வதந்தி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் கருத்துரைத்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலர்களிடம் விசேட அறிவித்தல் ஒன்றை அவர் விடுத்துள்ளார். அதில்,
“பிரதேசத்தில் நிலவரம் பெரும்பாலும் சுமுகநிலைக்கு வந்துள்ளது. குறித்த கலவரத்தில் பௌத்த துறவியொருவர் காலஞ்சென்றுள்ளதாக கதையொன்று வனளாவ அளக்கப்பட்டுள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை.
பொலிஸ் மா அதிபர் என்ற முறையில் நான் மிகவும் உறுதியாகச் சொல்கிறேன்.. அந்தக் கலவரத்தில் எந்தவொரு பிக்குவும் இறக்கவில்லை. இதில் காயப்பட்ட ஒரேயொரு பௌத்த துறவி தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மீண்டும் ஒருமுறை நான் சொல்வது என்னவென்றால், எந்தவொரு வாய்ப்பேச்சையும் நம்பாமல், அதற்காக கொதித்தெழாமல் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment