பொகவந்தலாவ பிரதான வீதியில் அனுமதியற்ற கடைகள் தொடர்பில் வாகன சாரதிகள் விசனம்!
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் பல கடைகள் அமைப்பதனால் அப்பாதையில் போக்குவரத்துக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் கடைகள் அமைப்பதனால் வாகன சாரதிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அரசாங்கத்தினுடன் இணைந்து கட்டப்படும் மேற்படி வைத்தியசாலைக்கு முன்னால் கடைகள் கட்டுவதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டவிரோதமாக கடைகள் கட்டப்படுவது தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸிடம் கேட்டபோது…
மேற்படி இடத்தில் ஒரு வியாபார நிலையத்தை கட்டுவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் அவருக்கு மட்டும் அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஏனைய கடைகள் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment