Thursday, June 26, 2014

அளுத்கமவில் சமித்த தேரரை தாக்கியோர் இனங்காணப்பட்டுள்ளனர்!

அளுத்கம தர்காநகரில் சென்ற பொசன் போயா தினத்தன்று குருந்துவத்த ஸ்ரீவிஜயாராமாதிபதி அயகம சமித்த தேரரைத் தாக்கியது தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் தேரரினால் அணிவகுப்பின்போது இனங்காணப்பட்டுள்ளனர்.

மொஹமட் அமீன் மொஹமட் அஸ்பர், மொஹமட் அமீன் மொஹமட் அர்ஷான், மொஹமட் அமீன் மொஹமட் அஸ்ஹர் எனும் மூவருமே சந்தேகநபர்களாக உள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் களுத்துறை நீதவான் வை.எஸ்.த. சில்வாவினால் இனங்காணும் அணிவகுப்புக்காக முன்வைக்கபட்டனர். அங்கு அயகம சமித்த தேரர், இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர்கள் இருவரினால் இம்மூவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment