“எனது இதயம் அன்பினால் பூத்தது” என்பதை மீண்டும் காட்டுகிறார் ஜனாதிபதி… இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்…!
இலங்கைக்கான கடல் எல்லையைக் கருத்திற் கொள்ளாது மீனவத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 82 இந்திய மீனவர்களையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்யுமாறு பணித்துள்ளார்.
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே சிறந்த நல்லுறவைப் பேணும் நோக்கிலேயே இவ்வாறு மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள் என தனது டுவிட்டர் சேவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியவசம் இருக்கின்ற இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவுள்ளது தொடர்பில் தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாகவும், இந்தியவில் கைதிகளாக இருக்கின்ற மீதி மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment