Monday, June 23, 2014

அமைச்சர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையில்…

மகிந்த யாப்பா ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்வதே சிறந்தது என்கிறார் புத்திக்க பத்திரன

மாத்தறை மாவட்டத்திலுள்ள பெரிய பிரச்சினையாக தற்கொலை செய்துகொள்வதற்காக மக்கள் நில்வளாகங்கையை பயன்படுத்தி வருவதாக ஊடகங்கள் பூதகரமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், தானும் நில்வளா கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாகவம் அமைச்சர் மகிந்த யாப்பா குறிப்பிடுவதாகவும், மகிந்த யாப்பா அன்றி, அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன மாத்தறையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,

“நில்வளா கங்கையின் மஹானாம பாலம் தற்போது மனிதர்கள் உயிர்நீத்துக் கொள்ளும் அபூர்வ இடமாக மாறியுள்ளது. இதுதொடர்பில் சிலர் பாதுகாப்புக்காக, இவ்வாறு நடக்காதிருக்க பாலத்தின் இருமருங்கிலும் வலை போடப்பட வேண்டும் என்ற நகைப்புக்கிடமான கருத்தை முன்வைக்கின்றனர். ஏன் அவர்கள் இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள் என ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களே மக்கள் இவ்வாறு மஹானாம பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என, மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது உயர்மட்ட அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் இருபிள்ளைகளையும் பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லது குடும்பப் பிளவு காரணமாக ஆற்றில் வீசி, தானும் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு செய்தி குறிப்பிடுகின்றது. அதனை வெளியிடுவது ஊடகவியலாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். இதனை ஊடகங்களில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விளங்கிக் கொள்ள இயலும்.

மகிந்த யாப்பா போன்ற அரசாங்க அமைச்சர்களுக்கு முடியாது. விவசாய அமைச்சர் மகிந்த யாப்பாவுக்கு விவசாயத் துண்டினால் எதுவும் செய்யவியலாது. அவரது விதி அது.. விதியமைச்சர் என்று அவரைச் சொல்லலாம். அதனால் அவருக்கு அரசாங்கம் தட்டும் பறைக்கேற்ற தாளத்திற்கு ஆடமட்டுமே அவருக்குத் தெரியும். விதியமைச்சரான அவர் ஆற்றில் பாய்வது தவிர வேறு எந்த்த் தீர்வும் இல்லை”

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com