மிருகக்காட்சிசாலையில் ஆரூடம் கூறும் நரிப்பெண் (படங்கள், வீடியோ)
பாகிஸ்தான் கராச்சி நகரிலுள்ள மிருகக்காட்சிச்சாலையில் உடலின் கீழ்ப்பகுதி நரியின் உருவத்திலும் மேல் பகுதி பெண் உருவிலும் உள்ள ஒருவர் எதிர்காலம் தொடர்பில் ஆரூடம் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார். மும்தாஸ் பேகம் என்ற பெண் புனைப்பெயரை தனக்குத்தானே சூட்டிக்கொண்ட 33 வயதான முராட் அலி என்பவரே இவ்வாறு மிருகக்காட்சிசாலையில் ஆரூடம் கூறி வருகிறார். நரிப்பெண் என அழைக்கப்படும் மும்தாஸ் பேகம் பாதி பெண் பாதி நரி வேடமிட்டு தினசரி 12 மணித்தியால நேரம் இவ்வாறு ஆரூடம் கூறி வருகின்றார்.
தனது தந்தை 16 வருடங்களுக்கு முன் இறந்தது முதற்கொண்டு முராட் அலி இவ்வாறு மும்தாஸ் பேகமாக மாறி ஆரூடம் கூறி வருகின்றார். முராட் அலியின் தந்தை 40 வருடங்களுக்கு முன்பிருந்து தான் இறக்கும் வரை இவ்வாறு மும்தாஸ் பேகமாக வேடமிட்டு ஆரூடம் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மொழிகள் பலவற்றையும் உரையாடும் வல்லமையைக் கொண்ட முராட் அலி, தனது தொழில் குறித்து விபரிக்கையில...., வாழ்க்கை குறுகியது. இங்கு விஜயம் செய்யும் மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் நானும் மகிழ்ச்சியடைவதாக உணர்கின்றேன் என்று கூறினார்.
0 comments :
Post a Comment