Sunday, June 22, 2014

சுவிட்சர்லாந்தின் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள முதலைகளின் பெயர்ப்பட்டியலை வங்கிகள் வெளிவிடுகின்றன.

இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக 'டெபாசிட்' செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சுவிஸ் ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 'டெபாசிட்' செய்துள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. தற்போது ஆட்சிப்பொறுப்பு ஏற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

இதற்காக முதல் கட்டமாக 'சிறப்பு விசாரணைக்குழு' அமைத்துள்ளது. இந்த நிலையில் சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி விதிகளுக்கு உட்பட்டு ஒரு புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. அதன்படி இந்தியர்களின் 'டெபாசிட்' கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகரித்து, ரூ.14 ஆயிரம் கோடியை (2 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ்) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியர்களின் ‘டெபாசிட்’ அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் கோடி என்றும் அதுவே 2010-ம் ஆண்டில் ரூ.28 ஆயிரம் கோடியாக குறைந்தது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அடையாளம் தெரியாத ‘பினாமி’ பெயர்களில் தங்கள் நாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை குவித்து வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

’இந்த தனிநபர்களும், நிறுவனங்களும் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து, அறக்கட்டளை, போலி கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் மூலமாக எங்கள் நாட்டில் உள்ள வங்கிகளில் அந்த பணத்தை போட்டு வைத்துள்ளனர்’ என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளா.

No comments:

Post a Comment