அமைச்சர்களுக்கு மரியாதை செய்வது போல மக்கள் எனக்கு மரியாதை செய்வதில்லை! - குறைப்படுகிறார் விக்கிரமபாகு
நாட்டிலுள்ள பெரிய பெரிய அமைச்சர்களைக் கவனிப்பது போல மக்கள் தன்னைக் கவனிப்பதில்லை என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகிறார்.
“அரசியலில் ஈடுபடுகின்ற எந்தவொரு அரசியல்வாதியும் பாதையின் ஒழுங்குமுறையை மீறி நடந்தால் பொலிஸார் அவர்களுக்கு ஒன்றும் சொல்வதில்லை.. போக விட்டுவிடுகிறார்கள். நான் ஒரு சிறிய மந்திரி மட்டுமே. என்னைக் கண்டால் நிறுத்தி கதைகள் அளந்துவிட்டு போக விடுகிறார்கள். பெரிய பெரிய அரசியல்வாதிகள் முகத்தைக் கண்டவுடனேயே போக விட்டுவிடுகிறார்கள். சத்தியமாக ஒருபோதும் எனக்கு தண்டப் பணத்திற்கான பற்றுச் சீட்டுக் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வளவுதான் திட்டினாலும் சிறிதாகவேனும் அவர்களை மதிக்கிறார்கள். ஆயினும், அவர்களைப் போல எனக்கு எந்தவித மதிப்பும் கிடையாது” எனவும் குறைப்படுகிறார் விக்கிரமபாகு கருணாரத்ன.
(கேஎப்)
1 comments :
நீ ஒரு தேச துரோகி , டொலருக்கு நாட்டை காட்டி கொடுப்பவன், உனக்கு யார் தருவார் மரியாதை.
Post a Comment