தீ அணைய முன் மின் கசிவால் ஏற்பட்டது என தெரிவித்தது நகைப்புக்குரியது! - மங்கள
இன்று அதிகாலை 3 மணிக்கு நோமிலிட் பற்றியெரிந்த்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவித்துள்ளார்.
“கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் பொது பல சேனா என்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற சக்தியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஹலால் பிரச்சினையை முன்வைத்து முஸ்லிம்களை இம்சைப்படுத்தி பொதுபல சேனா, நாட்டில் பாரிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
மக்களுக்கு மத்தியில் இனவாத்த் தீயை ஏற்படுத்துகின்ற பொதுபல சேனா அவசரமாகத் தடை செய்யப்பட வேண்டும். பாராளுமன்றில் இனவாத்த்தை க்க்குகின்றவர்களுக்கு எதிரான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இவை ஒன்றும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
நோலிமிட் கருகியுள்ள நிலையில் தற்போது பொலிஸார் அது மின்சாரக் கோளாரினால் ஏற்பட்ட விபத்து என்று கூறுவது நகைப்புக்குரியதாகும். இப்படிச் சொல்லும் பொலிஸ் மா அதிபரும் இதற்கு உடந்தையாக இருக்கின்றாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment