தற்கொலை வாழ்க்கையின் முடிவல்ல?
மலையக சிறுவர்கள் மத்தியிலும், பெரியவர்கள் மத்தியி லும் தற்கொலை முயற்சிகள், உயிரிழப்பு போன்ற சம்ப வங்கள் அண்மைக்காலமாக ஆக்கிரமித்துவருகின்றது. குடு ம்பத்தில் சிலசில முரண்பாடுகளாலும்,குடும்ப அங்கத் தினர்கள் மத்தியில் பரஸ்பர உறவின்மையாலும் இவ் வாரான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பொலிஸ் விசாரனைகள் மூலம் தெரியவருகின்றது. கடந்த ஜனவரி முதல் ஜீன் மாதம் வரை சில சம்பவங்களை விபரிக்கலாம்.
டயகம பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில் 17 வயதுமதிக்கதக்க யுவதி ஒருவர் கொழும்பில் தொழில் செய்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அக்கரப்பத்தனை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டம் ஒன்றில் தந்தையும், மகனும் வீட்டில் தூக்கிட்டு பரிதாபகரமாக நிலையில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பணை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டமை அப்பிரதேச மக்களையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொகவந்தலாவை பிரதேசபொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டமொன்றில் 04 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு இறந்தமை சுட்டிக்காட்டவேண்டிய அதேவேளை பாடசாலை மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையும் சுட்டிக்காட்டலாம்.
இது இவ்வாறு இருக்கையில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் செயற் பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது. டுயகம வைத்தியசாலைக்கு அண்மித்த தோட்டபகுதியில் யுவதி ஒருவர் அதிகமான பெனடோல் வில்லைகளை குடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அக்கரப்பத்தனை வைத்திய சாலையை அண்மித்த பகுதியில் கடந்தமாதம் மூன்று சம்பவங்கள் இதேபோன்று இடம்பெற்றுள்ளது. 13 வயதுடைய சிறுவர் ஒருவர் விசமருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்னும் இரு சிறுவயது சிறுமிகள் தூக்க வில்லைகளையும், பெனடோல் வில்லைகளையும் குடித்து அனுமதிக்ப்பட்டதோடு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதால் மலையக சமூகம் பாரியஅழிவை எதிர்நோக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இருந்து இவர்களை காப்பாற்றும் பொருட்டு விழிப்புணர்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் மத்தியில் மாலைநேரங்களில் தொலைகாட்சி தொடர்களை பார்வையிடுவதால் ஏற்படும் விளைவுகளின் விபரீதங்களே இதற்குகாரணமாக அமைகின்றது. அத்தோடு குடும்பங்களில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளின்போது தகாத வார்தைகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது அதிகமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்வதாவும், விசமருந்திசாவதாகவும், தூக்கிட்டுசாவதாகவும் பகிரங்கமாக சிறுவர்கள் தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆதனை சிலர் பின்பற்று வோர்களின் அதிகமானோர் இறப்பை நாடுகின்றனர்.
எனவே எமது சமூகத்தில் இவ்வாறான சிந்தனை உள்ளவர்களை விடுவிக்கும் வகையில் உளவியல் தொடர்பான பயிற்சிகளை தொடர்சியாக வழங்கவேண்டிய நிலைமை இருப்பதால் எமது சமூகத்தின் மேல் அக்கறைகொண்டவர்கள் சமூகத்தின் விழிர்ப்புக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதினை சமூகசேவையாளரும், சமாதான நீதவானுமாகிய திரு ஐ.கிருஸ்ணராஜா அவர்களை வினாவிய போது:
இன்று மாணவர்கள் மத்தியில் முழுமையாக கல்வியை நோக்காக கருதுவது அவர்களின் கட்டாயதேவையாக இருக்கின்றது. பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக் கிடையில் நல்ல பரஸ்பர உறவோடு நண்பர்களைபோல் பிள்ளைகளின் மத்தியில் பழகுவதன் ஊடாக ஒளிவு மறைவற்ற கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறும். இதனூடாக தற்கொலைகளை குறைப்பதற்கு ஒருகாரணமாக அமையும், சிறார்கள் மத்தியில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது மிகதேவையான ஒருவிடயமாகும். பெரியோர்கள், மற்றும் சமூகத்தினர் இன்று ஏதோ ஒருவகையில் சிறுவர்களின் தீயசெயல்களுக்கு காரணமாக அமைகின்றார்கள். பெரியோர்கள் மத்தியில் குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுக்காகசவுதான் அதற்கான தீர்வாக அமையும் என்று கருதுகின்றார்கள்.
ஒருவர் இறந்தால் அவரோடு முடிவதில்லை, அவருடைய பிள்ளைகள், மனைவி, உறவினர்கள் உட்பட ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலைக்கு சமய விழுமியங்களுடன் ஒன்றிணைந்து செயல்படாமையும் காரணமாகும். எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணாமல் வாழ்க்கையில் பலசவால்களை சந்திக்க கூடிய நபர்களாக உருவெடுப்பது ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை ரீதியாகமாற்றம் பெறவேண்டும். ஏன இவர் கூறினார்.
(க.கிஷாந்தன்)
...............................
0 comments :
Post a Comment