ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் உகண்டா சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர்!
உகண்டா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஒகேலோ ஒரியம், அலரி மாளிகையில் நேற்று பிற்பகல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். வட மாகாணத்திற்கு தாம் விஜயம் மேற்கொண்டபோது, அங்கு நிலவும் அமைதி சூழ்நிலை மற்றும் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தாம் மகிழ்ச்சியடை வதாகவும், அதற்காக அரசாங்கத்தை பாராட்டுவதாகவும், உகண்டா அமைச்சர், சந்திப்பின்போது, தெரிவித்தார்.
உகண்டா 20 வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் ஒகேலோ ஒரியம், குறுகிய காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய சேவைகள் தொடர்பாக, இங்கு சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச, உகண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, மசுலித்தா தொழில்பயிற்சி மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்ததாகவும், அதன் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் நிறைவடையவுள்ளதாகவும், ஒகேலோ ஒரியம், ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்தார்.
ஆபிரிக்க நாடுகளுக்கு தாம் விஜயம் மேற்கொண்டபோது, தமக்கு அங்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டதாகவும், அந்நாடுகளில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்கான முக்கியத்துவத்தையும் எடுத்;துரைத்தார்.
0 comments :
Post a Comment