Wednesday, June 25, 2014

சமாதான ஒப்பந்த காலங்களில் இடம்பெற்றதை போன்ற அபாயகரமான செயற்பாடை மேற்கொள்ள திட்டம்! சதி அம்பலம்!

சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் மிலேனியம் சிட்டியை தாரைவார்த்து இந்நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை பயங்கரவாதிகளை சென்றடையச் செய்ததைப் போன்ற தாரைவார்ப்பை மேற்கொள்வதற்கு ஒருசிலர் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாக, பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் இவர்கள் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இன்றும் நாளையும் விஷேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டின் புலனாய்வுத் துறை தொடர்பாக இவர்கள் இதனை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ருவன் வணிகசூரிய இதனைத் தெரிவித்த போது, பாராளுமன்றத்தில் இதுபற்றி யார் குறிப்பிடத் தயாராக இருப்பவர்கள் யார் என ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

தேசத் துரோகிககளுக்கு இடையே தேசப் பற்றாளர்கள் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து இத்தகவல்கள் கசிந்ததாகவும் தெரிவித்த வணிகசூரிய, இதுகுறித்து விரைவில் தெரிய வரும் எனக் கூறினார்.

இதனால் பாராளுமன்றத்தில் இவ்வாறான கருத்து வெளியிடப்படுவதன் மூலம் சர்வதேசத்திற்கு நாடு தொடர்பான பிழையான தகவல்கள் சென்றடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவச் செய்வதற்கு சிலர் முயற்சித்ததாகவும், புலனாய்வுத் தரப்பினர் இதில் தலையிட்டு இதனைத் தடுத்ததமையால், அவர்களது முயற்சி சீர்குலைந்ததாகவும், வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த தரப்பினர் மிலேனியம் சிட்டி சம்பவத்துக்கு சமமாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், இது நாட்டுக்கு பாதக நிலையை தோற்றுவிக்கும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com