எனக்கு பாட்டிகள் தான் பிடிக்கும் ; வாலிபரின் வினோத ஆசை!! (படங்கள்)
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர், மூதாட்டிகளுடன் டேட்டிங் செல்வதை பழக்கமாக கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ் டாவை நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (31). கோல்சென்டர் ஒன்றில் பணிபுரியும் இவர் அடிக்கடி பெண்க ளுடன் டேட்டிங் செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் இவர் டேட்டிங் செய்யும் பெண்கள் எல்லோருமே 50 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இந்த செயலுக்கு, இவரு டைய 50 வயது தாயார் செசிலாவும் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை.
இந்நிலையில் மேர்சூரி மெக்கூல் ( 91) என்ற மூதாட்டியை 5 வருடங்களுக்கு முன் தற்செயலாக நூலகத்தில் பார்த்த கெய்லி ,தன்னுடன் டேட்டிங் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து கெய்லி கூறுகையில், 60 வயது வித்தியாசம் தனக்கு பெரிதாக தெரியவில்லை என்றும் அவருடன் இருப்பதில் தனக்கு அனைத்து விதத்திலும் திருப்திகரமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேர்சூரி மெக்கூல் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கெய்லி மற்றும் அவரது தாயாருடனும், ஒரேவீட்டில் வாழ்ந்து வருகிறார்.
0 comments :
Post a Comment