Saturday, June 28, 2014

முதலாம் தர வகுப்பு மாணவர்களின் பகல் சாப்பாட்டை குப்பைத் தொட்டியில் வீசிய ஆசிரியை பற்றித் தெரியுமோ?

தர மாணவர்கள் பலர் பாடசாலைக்கு கொண்டுவந்திருந்த பகல் சாப்பாட்டை எல்பிட்டிய, வெலிவிட்டிய பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் மாணவர்கள் ஒப்பாரி வைக்கையில்கூட கருணை காட்டாமல் குப்பைத் தொட்டியில் கொட்டியுள்ள விடயம் தொடர்பிலான முறைப்பாட்டை எல்பிட்டிய கோட்டக் கல்விக் காரியாலயம் விசாரித்து வருகின்றது.

முதலாம் தர மூன்று வகுப்பறைகளின் மாணவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு உணவுகள் எடுத்து வருமாறு வகுப்பாசிரியை பெற்றார் கூட்டத்தின்போது தெரிவித்திருந்ததாக பாடசாலையின் உள்ளிடச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுஅவ்வாறிருக்க, வகுப்பு மாணவர்கள் ஐவரின் உணவுப் பெட்டிகளில் ரொட்டி, இடியப்பம், பாண் இருப்பது கண்டு கோப்ப்பட்டுள்ள ஆசிரியை மாணவர்கள் அழுவதைக் கூட கருத்திற் கொள்ளாமல், அவற்றைப் பறித்து குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கின்றார்.

(கேஎப்)

No comments:

Post a Comment