Sunday, June 29, 2014

ஜெனிவா ஐ.நா முன்றலில் முஸ்லிம்கள் சிறுவர் துஷ்பிரயோகம். விசாரணை வேண்டும் என்கின்றன சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இவ்வன்செயல்களுக்கு காரணமான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை கைது செய்வதுடன் அவ்வமைப்பினை இலங்கையில் தடைசெய்யவேண்டும் என்றும் நேற்று சனிக்கிழமை ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இத்தாலி, பிராண்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களில் ஒரு சிறு தொகையினர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.நா முன்றலில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் 10 மேற்பட்ட சிறார்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இவர்கள் இனவாத கருத்துக்களைக்கொண்ட சுலோகங்களையும் தாங்கி நின்றனர். இச்செயற்பாடானது வெளிப்படையானதோர் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதுடன். இவ்விடயம் தொடர்பில் சுவிட்சர்லாந்து பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிறுவர் உரிமை அமைப்புக்கள் வேண்டவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

சர்வதேச நாடுகளில் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டமைக்கு அவ்வமைப்பு மேற்கொண்ட சிறுவர் துஷ்பிரயோகங்களும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் மேற்படி அமைப்புக்கள், குறித்த ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் குறித்த சிறார்களின் பெற்றோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரவுள்ளனர்.










1 comment:

  1. இர்பான்June 29, 2014 at 2:15 PM

    யாரு வாப்பா இந்தமாதிரி வேலையை செய்யசொன்னது. இந்தப்படங்களில் நிற்கின்ற சிறுவர்கள் 10 க்கும் குறைந்த வயதினர் என்ற தெளிவாக தெரிகின்றது.

    இவ்வாறான போராட்டங்களி்ல் சிறுவர்களையும் சேர்த்துக்கொள் என்று அல்லாகுத்தாலா சொன்னதாக அல்குரானில் எங்கேயும் ஒரு வாக்கியம் தன்னும் இல்லை.

    இங்கு நிற்கின்றவர்கள் நிச்சயம் குர்ஆனை படிக்கவேண்டும்..

    ReplyDelete