ருகுணு பல்கலைக்கழக மாணவர் மீது நான் தாக்குதல் நடாத்தவில்லை - சனத் ஜயசூரிய
மக்கள் விடுதலை முன்னணி சுமத்தி வரும் குற்றச் சாட்டுக்களை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி கூறுவதை போல் ருகுணு பல்கலைக்கழக மாணவர் மீது தான் தாக்குதல் நடத்த வில்லை எனவும கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே தான் மூன்று தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சென்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
தனது கிராமத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாக தெரிவித்த ஜயசூரிய தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ருகுணு பல்லைக்கழகத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நடத்த வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட நான் 10, 15 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கவில்லை. கிராம மக்கள் கையெழுத்திட்டு கொடுத்த மகஜரை பெற்றுக்கொண்டு நான் ஜனாதிபதியைச் சந்திக்க புறப்பட்டு விட்டேன்.
எவராவது தாக்குதலுக்கு உள்ளானதாகவோ, காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவோ பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது.
எவ்வாறாயினும் கிரிக்கெட் மைதானத்தில் பந்துகள் உடைய கிரிக்கெட் மட்டையால் பந்துகளை விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர் என்ற சனத் ஜயசூரிய, தற்பொழுது மாணவர்களின் மண்டைகளை பிளந்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment