இலங்கையுடன் எந்தவிதமான இரகசியமான ஒப்பந்தமும் இல்லை!
இலங்கையுடன் மேலதிக ஒப்பந்தமோ அல்லது ரகசியமான ஒப்பந்தமோ செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெரி ரயிஸ் தெரிவித் துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் லஷ்மன் கிரியெல்ல கூறியுள்ள கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்- சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது கடன் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. சலுகைகளை நிறுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் வந்துள்ளது என்று ஐதேகவின் பிரதித் தலைவர் லஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவித்திருந்தார்.
எது எப்படியிருப்பினும் மேலதிக ஒப்பந்தமொன்று இதுவரை செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment