தற்போதை வைத்திய அதிகாரியில் கொட்டகலை மக்கள் அதிருப்தி! மூடப்படுகிறது வைத்திய அதிகாரி அலுவலகம்!
அரச வைத்திய சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று (16) முதல் மூடப்பட்டுள்ளதனால் இப்பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரினால் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஜனாத் அபே குணரத்ன கடந்த 13 திகதி கொட்டகலை இ.தொ.கா பிரதான காரியாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தனக்கு எதிராக வீண்பலி சுமத்தப்பட்டு பேசியதாக தெரிவிக்கப்பட்ட மேற்படி வைத்திய அதிகாரியை காரியாலயத்தை விட்டு இடமாற்றம் செய்யுமாறு விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அமைச்சரை வைத்திய அதிகாரிகளிட்ம மன்னிப்பு கேட்குமாறு கோரியே இன்று முதல் வைத்திய அதிகாரி காரியாலயம் மூடப்பட்டுள்ளது.
மேற்படி வைத்தியர் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய முறையில் நோய்க்கு ஏற்றவாறு சிகிச்சைகள் அளிப்பதில்லை எனவும் தனிப்பட்ட முறையில் பணத்திற்கு சிகிச்சையளிப்பதாகவும் தோட்ட தொழிலாளிகள் அமைச்சருக்கு கொடுத்த முறைபாடுகளையடுத்து இந்த அதிகாரியை இடமாற்ற்ம் செய்யுமாறு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இச்சம்பவத்தை பற்றி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிடம் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இச்சம்பவம் தொடர்பாகவும் மலையக சுகாதாரத்தை பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் எனினும் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும், வைத்தியர்களும் வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவதாகவும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் கொட்டகலை சுகாதார வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்கள் உட்பட ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு இல்லையெனவும் இதனால் தாம் பாதுகாப்பான வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்து செல்வதாகவும் தெரிவித்தனர்.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை மூடுவது பற்றி கர்ப்பிணி பெண்களும் தாய்மார்களும் கருத்து தெரிவிக்கையில் …
மேற்படி வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்வது பற்றி எந்த கருத்து முறண்பாடும் இல்லை எனவும் அவர்க்கு பதிலாக வேறு ஒரு வைத்திய அதிகாரியை நியமிக்குமாறும் அதுவரையும் இக்காரியாலயத்தை திறந்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment