Tuesday, June 17, 2014

கதிர்காம கொடியேற்றத்திற்காக மலையகத்திலிருந்து இன்று பாதயாத்திரை ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)


இம்மாதம் 28ம் திகதி கதிர்காமம் கொடியேற்றதிதற்கு கலந்து கொள்வதற்கு மலையக தோட்டப்பகுதியில் உள்ள பக்தர்கள் 6வது முறையும் பாதயாத்திரையை இன்று (17) ஆரம்பித்தார்கள்.

மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளில் உள்ள பக்தர்கள் இன்று காலை 7 மணியவில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

மஸ்கெலியாவிருந்து 400 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரையாக செல்வார்கள். ஒரு நாளைக்கு 35 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா பண்டாரவளை வெல்லவாய புத்தல வழியாக இந்த மாதம் 27ம் திகதி கதிர்காமத்திற்கு செல்வார்கள்.

இவர்கள் பாதயாத்திரையில் செல்லும் பிரதான நகரங்களில் உள்ள கோவில்களிலும், விகாரைகளிலும் தங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர். அந்த கோவில்களிலும் விகாரைகளிலும் இவர்களுக்கு அன்னதானம் வழங்குவதாக அவர்கள் மீண்டும் தெரிவிக்கின்றனர்.

20பேருடன் ஆரம்பமாகிய இந்த பாதயாத்திரையில் இடைக்கிடையில் இன்னும் சில பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்த இவர்கள் கதிர்காமம் பருவகாலம் முடியும் வரை கதிர்காமத்தில் தங்குவதாகவும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com