வட்டரெக்க தேரரின் மர்ம உறுப்பு கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டு, காவியுடை களைக்கப்பட்டு வீசப்பட்டுள்ளார்! (படங்கள் இணைப்பு)
ஜாத்திக்க பல சேனாவின் ஒருங்கிணைப்பாளரும் மகியங்கன பிரதேச சபை உறுப்பினருமான வட்டரெக்க விஜித்த தேரரின் காவியுடை களைக்கப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு பாணந்துறை ஹிரண பாலத்திற்கு அருகாமையில் அவர் வீசப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடும் தாக்குதலுக்குள்ளாகியிருந்ததனால் அவர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் ஸ்கேன் மற்றும் அவசர சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது மர்ம உறுப்பும் கடத்தல்காரர்களால் பிளேட் போன்ற கூரிய ஆயுதமொன்றினால் கீறியுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment