ஹக்கீம் பொய்களைச் சோடித்து பௌத்தர்கள் சிறுபான்மையினரை நசுக்கின்றனர் எனச் சொல்ல முயல்கிறார்! - சம்பிக்க
இளம் பௌத்த துறவியொருவர் அளுத்கம பிரதேசத்தில் தாக்கப்படவில்லை எனவும், பொலிஸார் பொய்யான செய்தியை வெளியிடுகின்றனர் எனவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுவது முழுப் பொய்யாகும் எனவும், அவர் பொய்யைச் சோடித்து ஹர்த்தல் மேற்கொண்டு இந்நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல முனைகின்றார் என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குருந்துவத்த விஜயராமதிபதி அயகம சமித்த தேரர் பொசனன்று முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதாகவும், அதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதுதொடர்பில் பொலிஸார் உண்மையையே வெளியிட்டதாகவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
“ரவூப் ஹக்கீம் பொய்களைச் சோடித்து நாட்டையும், சர்வதேசத்தையும் தீப்பற்றி எரியச் செய்வதற்காக ஆவன செய்பவர். நாடெங்கிலும் ஹர்த்தால் ஏற்படுத்தி இனவாத தீ மூட்ட முனைகிறார். இவர்களை விடவும் துரோகிகள் உண்டா? ஹக்கீம் இதன் மூலம் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மைச் சமூகத்தை வாழ விடுகிறார்கள் இல்லை என்பதை சர்வதேச ஊடகங்களுக்கும், மேற்கத்தேய நாடுகளுக்கும் காட்ட முனைகிறார்” என அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
2 comments :
Ada kuruda kannadiye matti par. Saryvaraviddal ankodai erukku payappadevandam kunamakkelam
Ada kuruda kannadiye matti par. Saryvaraviddal ankodai erukku payappadevandam kunamakkelam
Post a Comment