ரணிலாருக்கு காலம் சரியில்லை… பூசைக்காக இந்தியா செல்கிறார்…!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களில் பிரதம தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விசேட சனிப்பூசை ஒன்றிற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளார் எனத் தெரியவருகின்றது.
சனி இராசியில் பிரச்சினையொன்று உள்ளதனால் உடனடியாக அதற்குத் தீர்வாக பூசை நடாத்தப்பட வேண்டும் என சோதிடர்கள் வழங்கியுள்ள உபதேசத்தின் படி, இவ்வாறு இந்தியாவை நோக்கிப் பயணித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இந்தப் பயணத்தில் இதுவரை எந்தவொரு இந்திய முக்கியஸ்தர்களையும் சந்திப்பதற்குரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை எனவும் மேலும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment