திருமலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் ; அதிர்ச்சி வீடியோ !!
திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கியதாக கூறப்படும் கிழக்கு பல் கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோனமலை நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள ஹோட்டல் ஒன்றினுள் நேற்றிரவு பிரவேசித்த குறித்த மாணவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.
ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்தமையால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, இந்த சம்பவத்தின்போது காயமடைந்த ஐந்து இளைஞர்கள் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக திருகோணமலை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment