Monday, June 30, 2014

எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர்!

எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர். அதிலொருவர் வேலுப் பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹன விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில் இல்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று காவியுடையணிந்து கொண்டு சண்டியர்கள் வருகின்றனர். சேறுபூசி சண்டித்தனம் காட்டுவோர், சண்டியர்கள் இல்லை எனவும் சண்டியன் யார் என்பதை நான் நன்கறிவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் ஒரு சண்டியன். அவர் என்னை கொல்வதற்கு முயன்றார். எனது உடலில் ஒரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் மரணித்துவிட்டான். நான் இருக்கின்றேன். விஜேயவீர என்ற சண்டியனும் என்னை கொல்வதற்கு முயன்றார். அதனால் எனது உடலின் மற்றொரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் இறந்துவிட்டான். நான் உயிரோடு இருக்கின்றேன்.

தங்காலை, கலமெட்டி மீனவர் துறைமுகத்திற்கு இன்று அடிக்கல்லை நாட்டிவைத்ததன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com