வட்டரெக்க விஜித்த தேரர் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்திக் கொண்டாரா?
கடத்திச் சென்று கை கால்களைக் கட்டி, வெட்டிக் காயங்களுடன் இருக்கும்போது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரெக்க விஜிக்க தேரரின் வெட்டுக் காயங்கள் அனைத்தும் அவரினாலேயே ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வைத்திய பிரிவு சந்தேகம் தெரிவிக்கிறது. காயங்கள் ஏற்பட்டுள்ள இடங்கள் மற்றும் அவற்றின் தன்மையைப் பார்க்கும்போது இந்தச் சந்தேகங்கள எழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பேச முடியாதிருப்பதற்கு அல்லது பேச்சு நிற்பதற்குரிய எந்தவித நோய்க் காரணிகளும் இல்லாதபோதும் கூடுதலான நேரம் அவர் வைத்தியசாலையில் பேசாதிருந்தமை குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேரரின் உடம்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெட்டுக் காயங்களில் எதுவும் பயங்கரமானவை அல்ல எனவும், அந்தக் காயங்களை தனியாகவே ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுவதுடன், வைத்தியசாலையிலிருந்து செல்வதற்குரிய நிலைமையில் அவர் இருக்கின்ற போதும், தனக்கு பல்வேறு வருத்தங்கள் உள்ளதாகக் கூறி வைத்தியசாலையிலிருந்து செல்லாமல் இருப்பதாகவும் அறியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment