ஹட்டன் நுவரெலியா வீதியில் வேன் விபத்து!
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இன்று (08) பிற்பகல் வேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லிந்துலை மெராயா பிரதேசத்தில் இருந்து ஹட்டனில் நடைபெறும் திருமண வீட்டிற்கு கலந்து கொள்வதற்காக வந்த வேன் வண்டியே இவ்வாறு .விபத்துக்கள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 4 சிறுவர்கள் அடங்குவதாகவும் ஏனைய 6 பேருக்கு பெரும் பாதிப்புகள் இல்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment