இலங்கைக்கு எதிராக, பிள்ளையின் விசாரணைக்குழுவிலிருந்து புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இருவர் அதிரடியாக நீக்கம்!
கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்த கோபி அனான் விசாரணைக்குழுவிற்கு தலமை
இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் 10ஆம் தேதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
கோபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment