அலுகோசு பதவிக்கான பெயரானது உயிர் எடுப்பவர் என மாற்றப்பட்டுள்ளது!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்று கின்ற நபரை அலுகோசுஎன்றே அழைத்தனர். அலுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது. அதனடிப்படையில் மக்களிடமிருந்து 200 பெயர்கள் கிடைக்கப்பெற்றன.
அந்த பெயர்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இந்த பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நபரொருவரை தூக்கிலிடும் அதிகாரியின் பதவிக்கு அளுகோசு என்ற பெயர்கொண்டு அழைக்கின்ற போது அவரின் பதவிக்கும் அவருக்கும் ஏற்படுகின்ற அபகீர்த்தியை ஒழிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இதுவரையிலும் அலுகோசு என்று பயன்படுத்தப்பட்ட பதவிக்கான பெயரானது உயிர் எடுப்பவர் என்று மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment