தெற்கு அதிவேக பாதையின் வெலிபன்ன பிரவேச பாதை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது! (படங்கள்)
தெற்கு அதிவேக பாதையின் வெலிபன்ன பிரவேச பாதை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் அதனை அண்டி யுள்ள அனைத்து பாதைகளிலும் வெள்ளம் பரவியுள்ளது. இதனால் அதிவேக பாதையில் வெலிபன்ன பிரதேச பாதை ஊடாக பிரவேசிப்பதும், வெளியேறுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக பாதை ஊடான போக்குவரத்திற்கு எதுவித பாதிப்பகளும் ஏற்படவில்லை.
அடைமழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. களுத்துறை மாவட்டத்தில், சாலிந்தநுவர, அகலவத்த, புலத்சிங்கள, மத்துகம களுத்துறை பிரதேச செயலகங்களிலும் மண்சரிவுகள் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
களுத்துறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதுடன், இப்பணிகளை அவதானிப்பதற்காக, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, குமார வெல்கம ஆகியோரும் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, நிலைமைகளை அவதானித்தனர்.
அடைமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்;கை அனர்த்தங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கும், அரசாங்கம் அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் துரிதமாக செயற்பட்டு வருவதாக, அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில், பாதுகாப்பு படைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளன. விமானப்படை மூன்று ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி, உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றது.
0 comments :
Post a Comment