Thursday, June 26, 2014

பேருவலை மற்றும் அலுத்கம மோதல்களில் சேதமடைந்தவற்றை புனரமைக்க இராணுவத்துக்கு 150 மில்லியன்.

பேருவலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களை மீள திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஜனாதிபதியின் நேரடி தலையீட்டினால் நேற்றைய தினம் 50 மில்லியன்ரூபா களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி.சி.ஜயலாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 150 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்திற்குள் சகல நிர்மாணப்பணிகளும் பூர்த்தி செய்யப்படுமென களுத்துறையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணிகளில் இராணுவம் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர்களான குணரத்ன வீரகோன், ராஜித்த சேனாரத்ன, ரோஹித்த அபேகுணவர்தன, இராணுவத்தினர் சார்பில் மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவெல ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment