Friday, May 2, 2014

TNA அரசியல் கட்சியாக பதிவுக்காக புதியகுழு…! சம்பந்தன் வீட்டுக்கா?

இதுவரை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாது இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்காக ஐவர் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அவ்வாறு பதிவுசெய்யுமிடத்து, ஆர். சம்பந்தனுக்கு தலைமைப் பதவி பறிபோகும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தெரியவருகின்றது.

அவ்வமைப்பின் விசேட செயற்குழுவினரின் கூட்டமொன்றின்போது, பெரும்பான்மையினரின் அழுத்த்த்தின் பேரில் இக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், டீ. சித்தார்த்தன் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com