கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியின் மீராவோடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவன் மற்றும் IRO College of Education ஆகியன இணைந்து ”உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்” (Teach Your Child) பெற்றோர்களுக்கான உளவியல் கருத்தரங்கு ஒன்றினை 2014.05.01ஆந்திகதி வியாழக்கிழமை பி.ப. 04.00 மணி தொடக்கம் மட்/மம/வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வில் இலங்கையின் பிரபல உள வள ஆலோசகரும், IRO College of Education பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஆதில் ஹசன் அவர்கள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கான உளவியல் கருத்தரங்கில் விரிவுரையாற்றினார்.
No comments:
Post a Comment