Friday, May 9, 2014

கடற்படையினரால் தெலிசீமியா நோயாளர்களுக்காக உட்செலுத்தும் உபகரணம் கையளிப்பு!

இலங்கை கடற்படையின் சமூக சேவைகளில் இன்னொரு திட்டமாக கடற்படை ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பகுதியினால் குறைந்த செலவிலான உற்பத்தியாக உருவாக்கப்பட்டுள்ள தெலிசீமியா நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பயன்படுத்துகின்ற மருத்துவ உபகரணம் கையளிக்கும் மூன்றாவது கட்டம் நேற்று (08) ஐக்கிய நாடுகள் அமைப்பின் தென் ஆசியப் பிராந்திய தெலிசீமியா நோயுடன் தொடர்புடைய சிறுவர் மற்றும் போசனையுடன் தொடர்புடைய, இலங்கை தெலிசீமியா நோய் நிவாரண செயற்றிட்டத்தின் ஆலோசகர், ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடைபெற்றது என ஊடகப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அவ்வமையம், கடற் படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட குறித்த இயந்திரம் 250 பதுளை, கண்டி, குருணாகலை, அம்பாறை, ஹலாவத்தை போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட வர்ணகுலசூரிய, இதன் முதலாவது கட்டம் சென்ற 2011 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ, அவ்வமைச்சின் சேவா வனித்தா பிரிவின் தலைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் இயந்திரங்கள் 150 பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாவது கட்டம் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இந்த வைத்திய உபகரணம் 200 பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் முக்கியத்துவம் யாதென்றால், ரூபா 45,000/= - 65,000/= பெறுமதியான இந்த இந்தியரங்கள் இலவசமாகவே வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com