பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் காணொளி தொடர்பில் கவலை தெரிவிக்கிறது முஸ்லிம் கவுன்ஸில்!
புத்த பெருமானுக்கும் பௌத்த சமயத்திற்கும் இழிவு உண்டாக்கும் காணொளி ஒன்றை இஸ்லாமிய அமைப்பொன்றினால் இணையத்தில் “யூரியுப்பில்“ வெளியிடப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
“ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்” எனும் இஸ்லாமிய அமைப்பினால் 2013 ஆம் ஆண்டு இணையத்தில் ஒன்றுசேர்த்திருந்த காணொளியே தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
முஸ்லிம் அமைப்பாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முஸ்லிம்களாயினும் சரி புத்த பெருமானுக்கோ பௌத்த மதத்திற்கோ இழிவு உண்டாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது என அக்கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் பீ.பீ.ஸி செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது -
இஸ்லாமிய சமயம் எந்தவொரு மதத்தையும் நிந்திப்பதில்லை. இலங்கை வாழ் முஸ்லிம்களில் 99% இற்கு மேற்பட்டோர் இந்தக் காணொளிக்கு எதிர்ப்புத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
சிவில் அமைப்பின் ஒன்றுகூடலாக உள்ள முஸ்லிம் கவுன்ஸிலின் நோக்கம் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் எனும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதே எனக் குறிப்பிட்டுள்ள என்.எம். அமீன், எந்தவொரு மதமும் இன்னொரு மதத்தை இழிந்துரைப்பதை தங்களது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சகல இனங்களும் தற்போது ஒருமைப்பாட்டுடனும், சமாதானமாகவும் வாழ்கின்றது என்பதற்கு இம்முறை நடந்தேறிய வெசாக் பௌர்மணி நிகழ்ச்சி எடுத்துக்காட்டாகும். இந்நிகழ்ச்சியில் மக்கள் மத வேறுபாடு களைந்து தங்களது ஒத்துழைப்பை நல்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
2 comments :
பொதுபல சேனா மன்னிப்பு கேட்டாலும் முஸ்லிம் கவுன்சில் பிரச்சினைகளை தூண்டுமா?
Posted by Kattankudi Web Community (KWC) on 16/05/2014
question markஸ்ரீலங்கா தௌஹீத் ஜாமத்தின் செயலாளர் சகோதரர் அப்துல் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தில் ஏற்றுக்கொள்ள பட்ட நூலில் இருந்து கூறிய ஒரு தகவலில் புத்தர் மனித இறைச்சி உண்டதாக கூறப்பட்டதாக தவறுதலாக கூறி இருந்தமை நாம் யாவரும் அறிந்ததே. இது தேரர் ஒருவர் மனித இறைச்சி உண்டதாகவே அந்த நூலில் கூறப்பட்டமை புத்தர் என்று இவர் தவறுதலாக கூறியதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருதாகவும் அறிவித்தும் விட்டார். இதற்கான சட்ட நடவடிக்கைக்கும் உள்வாங்க பட்டார்.
மாற்று மதங்களை பற்றிய உரையாடல்களை கையில் எடுத்து மத நல்லிணக்கங்களை,மதங்களில் உள்ள உண்மைகளை எடுத்து சொல்லும் முயற்சியில் ஈடுபடும் எல்லா மனிதர்களிலும் தகவல்களில் சில தவறுகள் ஏற்படுவது மனித இயல்பே.புத்தர் மனித இறைச்சி உண்டார் என்பதும் அவரோடு இருந்த தேரர் உண்டார் என்பதும் பாரிய வித்தியாசமான தகவல் அல்ல. ஆனாலும் தவறு என்பதில் சந்தேகம் இல்லை.
அவர்கள் மதிக்கும் நூலில் மனித இறைச்சி உண்ட பௌத்த துறவிகளும் உள்ளனர் என்ற தகவலே கருத்தாக்கத்தின் சாரம் என்பதே தவிர யார் உண்டார் என்ற தகவலில் உள்ள தவறை வைத்து பிரச்சினையை விரும்புகின்றவர்களே இதனை பெரிதாக்க விரும்புகின்றனர் என்பதே உண்மை.இறைச்சி உண்ணுவதை தடுக்க முற்படும் இவர்களின் நூல்களில் உள்ள அசைவ உணவு பற்றிய உண்மையை இது அவர்களுக்கே எடுத்து சொல்ல காரணமாக அமைந்ததே தவிர இது வேண்டும் என்று எழுப்பப்பட்ட தகவல் அல்ல.மனித இறைச்சி உண்ணும் அளவு பௌத்த துறவிகள் இருந்துள்ளார்கள் என்றால் மாட்டு இறைச்சியை உண்ணுவதில் என்ன குற்றம் என்ற கேள்வியை நமக்கு சாதகமாகவே பௌத்த மக்களில் அது ஏற்படுத்தி நிற்கும் என்பதே நிதர்சன உண்மை.
இப்படியான தவறுகளை சுட்டுகாட்டியும் திருந்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் கண்டனம் தெரிவிக்கலாம் என்பது பொதுவான மரபு ஆகும்.ஆனால் தான் கூறிய தகவலில் ஏற்பட்ட பிழைக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன் என்று உறுதியாக அவர் பல இடங்களில் அறிவித்த பின்பும் அதனை வெளிப்படையாக எந்த ஊடகத்தில் கூறினாரோ அதே ஊடகங்களில் ஊடக மாநாடு நடத்தி தனது மன்னிப்பை தெரிவித்த பின்பும் முஸ்லிம் கௌன்சில் போன்ற அமைப்புகள் யாரின் நலவை நாடி இதனை தூக்கி பிடித்து பூதாகாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
இப்படியான நடவடிக்கை கையில் எடுக்கின்றவர்கள் இனவாதிகள் அல் குர்ஆனை தூற்றும்போது இஸ்லாத்தை கொச்சைப்படுதும்போது இந்தளவு கோபம் கொள்ளவில்லை என்பது வேதனையான விடையமாகும்.
மன்னிப்பு கேட்டு தனது தவறை வெளிப்படையாக அறிவித்த ஒருவரை மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்க கோருவது என்பது இவர்கள் பொதுபல சேனா அமைப்பு,ஞானசார தேரர் போன்றவர்கள் இஸ்லாத்தையும் குர்ஆனையும் கொச்சைப்படுத்தியதட்கு மன்னிப்பு கேட்டாலும் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க கோருவார்களா?இந்த அணுகுமுறை நாட்டின் சட்டத்துக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் உகந்ததா என்பதை முஸ்லிம் கௌன்சில் அமைப்பு தம்மை சுயவிசாரனை செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
ஏற்கனவே இனவாதம் நம்மை இலக்குவைத்து காத்திருக்கும் நேரம் நாமே எரியும் தீயில் என்னை ஊற்றி நமது சகோதரர்களை காட்டிக்கொடுக்கும் வேலைகளை செய்வது வேதனைக்குரிய விடையமாகும்.
மாற்று மத உரையாடல்களில் மனித தவறுக்கு அப்பால்பட்டு கறுத்த பதியமுடியாது என்பதை வரலாற்று பக்கங்களை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் புரியும்.ஆனாலும் சுட்டிக்காகட்டும் தவறுகளை மனமுவந்து ஏற்று மனிப்பு கேட்கின்றவர்களே உண்மையான கருத்து பரிமாற்றங்களுக்கும் மத நல்லிணக்கம் ஏற்படுத்தவும் தகுதியானவர்கள் என்பதோடு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றவர்களை பலிவாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானவர் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Cairo-Egypt
ஷூரா சபையின் அறிக்கை கோழைத்தனமானதாகும்
சமூகத்தை தலைமை தாங்குகிறோம் என்று தாமே தங்களை பிரகடனம் செய்துகொண்டு தேவையான நேரத்தில் குறைந்த பட்ச அறிக்கைகள் கூட விடாமல் இருந்த ஷூரா சபை தற்போது எல்லாம் முடிந்த நிலையில் பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும் என்று வாய் திறந்ததன் மர்மம் என்ன?
சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளில் இஸ்லாம் காட்டித்தரும் ஒழுங்குமுறை ஷூரா சபையின் எந்த இடத்திலுமோ தளத்திலுமோ பிரயோகிக்கப்படவில்லை என்பதே உண்மை.
சமூகவியல் சார்ந்த அடிப்படை கோட்பாடு சமூகவியல் அறிஞர்களால் கீழ்கண்டவாறு கூறப்படும்.
“”تأخير الحاجة عن وقتها عبث
“தேவையான ஒன்றை அதன் உரிய நேரத்துக்குள் பிரயோக்கிக்காமல் இருப்பது தேவையற்ற ஒன்றாகும்” எனும் கோட்பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் அன்றே நமக்கு சொல்லித்தந்த அடிப்படை சமூகவியல் பாடமாகும்.
எனவே சமூகம் சார்ந்த பொறுப்புக்களை கையில் எடுத்தவர்கள் உண்மையில் தாம் சமூக அக்கறை உள்ளவர்கள் என்றால் இஸ்லாமிய சமூகவியைல் கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.இஸ்லாமிய சமூகவியல் கோட்பாடுகள் அறியாமல் வெறும் காட்சிப்பொருளாக தலைமை வகிப்பது என்பதற்கு ஷூரா சபை தேவை அற்ற ஒன்றாகும் என்பதோடு வீண் செலவுகளையும் பிரித்தாளும் வேலைகளையும் அவசியப்படுத்தும் நிலை அமையும்.
ஷூரா என்றாலே உலக விவகாரங்களில் மட்டுமே அமையும்.இதையே அல் குர்ஆண் கூறுகிறது.
“அவர்களின் விவகாரங்கள் அவர்களுக்கு மத்தியில் ஷூரா முறையில் இருக்கும்”
இந்த முறையில் பார்க்கும்போது ஷூரா முறை என்பது சமூகத்தின் பிரச்சினைகளில் சமூகத்துக்கு தேவையான நேரத்தில் காரியம் ஆற்றுதலும் அவர்களுக்கு வழிகாட்டுதலும் ஆகும்.இது அல்லாது சமூகத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் கசப்பான நிகழ்வுகள் என்பனவற்றை பற்றிய எந்த அக்கறையும் எடுக்காது வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டு சம்பவம் முடிந்த பின்பு வெறும் அறிக்கையை வெளியிட்டு நாங்களும் இருக்கிறோம் என்பதை ஊடகம் செய்வது சமூக பொறுப்புணர்வு வாய்ந்த செயல் அல்ல.
இங்கு நான் குறிப்பிடுவது ஆவேசமான நடவடிக்கைகள் எடுக்கவோ உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளை எடுத்திருக்க வேண்டும் என்றோ கூறவில்லை.நமது நாட்டில் நமக்கு இருக்கும் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஜனநாயக வழியில் தீர்வுகளை பெற முடியுமான வழிகள் ஆயிரம் உள்ளன.இவ்வாறான முறைகளை பயண்படுத்தி எந்த நகர்வையும் முன்வைக்காது பொதுபல சேனா போன்ற தீவிரவாத அமைப்பை ஜனாதிபதி உட்பட பசில் ராஜபக்ஸ போன்றோர் நேரடியாக கண்டிக்கும் வரை காத்திருந்து அவர்களை தடை செய்ய நாங்களும் அறிக்கை விட்டோம் என்ற தொனியில் அறிக்கை ஒன்றை காகிதத்தில் எழுவதுதான் களத்தில் நின்று கருமம் ஆற்றுபவர்களின் பொறுப்புணர்சியா?
இஸ்லாமிய பத்வாக்கள் மார்க்க விளக்கங்கள் என்பன போன்ற விடையங்களை பத்திரிகையில் காகிதத்தில் எழுதி மக்களுக்கு வெளியிடுவது என்பதில் நியாயம் உள்ளது.ஆனால் சமூக பொறுப்புணர்வுள்ள விடையங்களை காகித அறிக்கைகள் மூலம் செய்வது என்பது சமூக பொறுப்புள்ள அமைப்பின் பொறுப்பு அல்ல.களத்தில் நின்று பணியாற்றும் பொறுப்பே சமூகம் சார்ந்த பொறுப்பாகும்.நீங்கள் செய்யும் இந்த அறிக்கை நகர்வை இலங்கை சமூகம் எதிர்பார்த்து இருக்கவும் இல்லை அதனால் இந்த சமூகத்துக்கு தீர்வு வரப்போவதும் இல்லை என்பதை கடந்த கால நிகழ்வுகளும் தரவுகளும் நமக்கு சாட்சி பகர்ந்து வருகின்றன.
இந்த விடையத்தில் களத்தில் நின்று கருமம் ஆற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் ரவூப் ஹகீம்,இலங்கை தௌஹீத் ஜமாஅத்,வெளிநாட்டு வாழ் சகோதர்கள் போன்றோரின் செயல்பாடுகள் இலங்கை மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட பொறுப்புணர்ச்சி வாய்ந்த ஒன்றாக நோக்க்ப்பட்டமை குறிப்பட தக்கதாகும்.
வெறும் அறிக்கைகளை வெளியிட வேண்டும் எனில் அதற்கு ஜமிய்யதுள் உலமாவை விட்டு வெளியில் ஒரு சபை உருவாக்கம் தேவை அற்ற ஒன்றாகும்.தேவையான நேரத்தில் தேவையான சமூக வெளிப்பாடுகளை காட்டாத எந்த உருவாக்கமும் இன்னொரு சபை உருவாக்கத்தை தேடி நிற்கும் என்பதை ஷூரா சபை உருவாக்கம் எடுத்து காட்டியது என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இன்றியே அறிந்துகொள்ள முடியும்.
எனவே ஷூரா சபை உண்மையில் சமூகம் சார்ந்த விடையங்களை அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டது என்றால் அதன் வெளிப்பாடுகள் வழமையான மரபு வழியில் அல்லாமல் புதிய பரிணாம முறையில் சமூகவியல் கோட்பாட்டுடன் ஒத்துபோகும் வகையில் இருக்க வேண்டுமே தவிர பயந்த கோழைத்தன சுபாவங்களை வெளிப்படுத்தும் அறிக்கைகளை அது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.
Post a Comment