மற்றுமொரு வெள்ளைவேன் கடத்தல் நாடகம் அம்பலம்! கடத்தப்பட்டதாக நாடகமாடியவர் பொலிஸாரால் கைது!
கடத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை செய்த மாளிகாவத்தையில் உள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
குறித்த நபரை பொலிஸாரே வெள்ளை நிற வேன் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது இவரை கைது செய்ய முடியாது போனால் பொலிஸாருக்கு பெரும் அபகீர்த்தி ஏற்படுவது மட்;டுமன்றி சில நேரம் இன மோதல்களும் ஏற்பட இடமிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாடு நேற்று மாலை மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தௌஹீத் ஜமாஅத் எனும் முஸ்லிம் அமைப்பின் அப்துல் வஹாப் மொஹமட் நஸார்தீன் என்பவர் பொலிஸார் என்று கூறிக் கொண்டவர்களால் வெள்ளை நிற வேன் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தௌஹீத் ஜமாஅத் எனும் முஸ்லிம் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஜவ்பர் என்பவரால் இம்முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் சிலாபத்தில் ஆற்றிய உபதேசம் தொடர்பாக விசாரிப்பதாகவும் தமது அமைப்பு தொடர்பாக விசாரிப்பதாகவும் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விசாரணையை மேற்கொண்டோம். இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த நபரை எம்மால் கைது செய்ய முடிந்தது.
குறித்த நபர் முற்றிலும் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார். தனது மனைவி மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்வதற்கான இவ்வாறான நாடகத்தை நடத்தியுள்ளார். இவர் கைது செய்யப்பட்டார்.
அவர் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டமையால் இன்றைய தினம் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை எம்மால் கண்டு பிடிக்க முடியாது போனால் ஊடகங்கள் இது குறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டிருக்கும். சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் நாம் அபகீர்த்திக்குட்படுத்தப்படுவோம். இது போன்ற சொந்த விடயங்களை நிறைவேற்றச் செல்வோரை கைது செய்ய நாம் பின்நிற்க மாட்டோம் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்
0 comments :
Post a Comment