Sunday, May 11, 2014

மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!!

மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலாத் தளமாக்குவதற் கான ஒப்பந்தம் கைச்சாத்து கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்க தூதுவராயலத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.

தொல்பொருள் அகழ்வு ஆராச்சி நிலையமும், அமெரிக்க தூதுவராலயமும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. இதன் நிமித்தம் அமெரிக்க தூதுவராலயத்தின் கலாசாரம் அலுவலகத்தின் அதிகாரியொருவர் நேற்று வருகை தந்து அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com