மட்டு. அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியான திருட்டுகள்; இருவர் கைது ! பெருமளவு பொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள்,அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறு வனங்களை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்ட குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பெருமளவு பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். தொலைபேசி உரை யாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசார ணையின் போது கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிர தேசங்களில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் களு வாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது திருட்டுகளுக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள் உட்பட 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரட்னநாயக்க தெரிவித்தார். கடந்த வருடம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழங்குடா, மஞ்சந்தொடுவாய், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங் களில் சமுர்த்தி வங்கிகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங்களுடன் இவர்கள் தொடர்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, நாவற்குடா மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, அம்பாறை ஆகிய பகுதிகளில் தபால் நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங் களிலும் கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரட்னநாயக்க தெரி வித்தார்.
0 comments :
Post a Comment