ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலத்தை விமல் ஏன் பகிஷ்கரித்தார்?
பல ஆண்டுகளாக மே தின ஊர்வலத்தைத் தனியாக நடாத்தி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே ஊர்வலங்களில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணி 2013 ஆம் ஆண்டு, ““பிரிவினைவாத அதிகாரங்களுடன் வடக்கில் தேர்தல் வேண்டாம்” எனும் கருப்பொருளில் மே தின ஊர்வலத்தை தனியாக நடாத்த ஆவன செய்தது.
ஆயினும் அக்கட்சி இம்முறை, மே தினத்தை முன்னிட்டு எந்தவொரு ஊர்வலமோ, எந்தவொரு விசேட கூட்டங்களோ ஏற்பாடு செய்யவில்லை.
அதனால், தேசிய சுதந்திர முன்னணி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டனர்.
எது எவ்வாறாயினும், இறுதியில் அறியவந்தது என்னவென்றால், தேசிய சதந்திர முன்னணியின் மத்திய செயற்குழுவினால் சென்ற வாரம் எடுத்த முடிவின்படி, விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. என்பதே.
(கேஎப்)
0 comments :
Post a Comment