ரஷ்யாவுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்ய இலங்கை தீர்மானம்!
பயங்கரவாதம், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத ஆட்கட த்தல் என்பன தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதேவேளை சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தவும் விசேட அதிரடிப் படை பணிகளை செயற்படுத்தவும் அமைச்சுக்களுக்கிடையிலான நடவடிக்கை குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சிற்கும் ரஷ்ய உள்விவகார அமைச்சிற்குமிடையில் மேற்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தத்தின் மூலம் மோசடி, போதைப் பொருள் கடத்தல் என்பவற்றை தடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
0 comments :
Post a Comment