வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு தனியார் வங்கியொன்றில் காசாளராக கடமைபுரியும் வவுனியாவைச் சேர்ந்த எம்.லதீஸன் (23) என்ற இளைஞன் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment